logo
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின்  145 உறுப்பினர்களுக்கு ரூ.1.32 கோடி கடனுதவி: அமைச்சர் கே.சி.கருப்பண்ணன வழங்கல்.

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் 145 உறுப்பினர்களுக்கு ரூ.1.32 கோடி கடனுதவி: அமைச்சர் கே.சி.கருப்பண்ணன வழங்கல்.

29/Nov/2020 05:44:55

ஈரோடு: ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், கேசரிமங்கலம், மாணிக்கம்பாளையம், ஒலகடம் ஆகிய தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களைச் சேர்ந்த 145 உறுப்பினர்களுக்கு   மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் ரூ.1,32,54,000 - மதிப்பீட்டில் மத்திய காலக்கடன், பயிர்கடன் மற்றும் பங்கு ஈவு தொகைகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்  வழங்கினார்.


 ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் விவசாயிகள், மகளிர், சிறு வணிகர்கள் ஆகியோருக்கு மத்திய கால கடன், பயிர் கடன், நகை கடன், சிறு வணிக கடன், கறவை மாடு கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 

அதனைத் தொடர்ந்து, இன்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில், அம்மாபேட்டை ஒன்றியம் கேசரிமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் 75 பயனாளிகளுக்கு ரூ.65.25 லட்சத்தில்  மத்திய காலக்கடன்களையும், மாணிக்கம்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் 20 பயனாளிகளுக்கு ரூ.17.40 லட்சத்திலான மத்திய காலக்கடன்களையும், ரூ.5.72 லட்சத்தில்  பங்கு ஈவு தொகையினையும், ஒலகடம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் 33 பயனாளிகளுக்கு ரூ.28.71 லட்சத்தில்  மத்திய காலக்கடன்களையும், 17 பயனாளிகளுக்கு  ரூ.15.45 லட்சத்தில்  பயிர்கடன்கள்  என மொத்தம் 145 பயனாளிகளுக்கு  ரூ.1, கோடியோ 32 லட்சத்தி 54 ஆயிரம்  மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா எஸ்.பார்த்திபன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Top