logo
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்: மத்திய சுகாராத்துறை அமைச்சர் தகவல்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும்: மத்திய சுகாராத்துறை அமைச்சர் தகவல்

13/Feb/2021 09:48:11

மதுரையில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாநிலங்கவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 வாரங்களாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், மதுரை எய்ம்ஸ் கட்டும் பணிகள் இன்னும் தொடங்கப்படாதது ஏன் என திமுக மக்களவை உறுப்பினர்  உறுப்பினர் டி.ஆர். பாலு கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஹர்ஷ் வர்தன் கூறியதாவது: மதுரையில் எய்ம்ஸ் அமைக்கும் பணிக்காக ரூ.1,264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ. 12 கோடி செலவு செய்யப்பட் டுள்ளது. ஜாப்பான் நிறுவனத்துடன் ஏற்பட்ட தாமதத்தால் காலதாமதமா கியுள்ளது. பிரச்னைகள் விரைவில் மத்திய அரசால் தீர்க்கப்பட்டு, பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்

Top