logo
குறைகளை தெரிவிக்க  அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ் அப் எண்ணிற்கு தினமும் 40 புகார்கள்: ஈரோடு  மாநகராட்சி ஆணையர் தகவல்

குறைகளை தெரிவிக்க அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ் அப் எண்ணிற்கு தினமும் 40 புகார்கள்: ஈரோடு மாநகராட்சி ஆணையர் தகவல்

25/Jul/2021 11:30:20

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை பூர்த்தி செய்யும் பணிக்காக 9489092000 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

 புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  கவனத்திற்கு உடனடியாக சென்று அந்த புகார் மீது தீர்வு காணும் வகையில் இந்த வாட்ஸ்அப் எண் கொடுக்கப்பட்டு வந்தது. கடந்த 20ஆம் தேதி இந்த வாட்ஸ்-அப் புகார் எண் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

அமைச்சர் முத்துசாமி இதனை தொடங்கி வைத்தார். அதிலிருந்து தினமும் இந்த வாட்ஸ்அப் இன் இருக்கு 30 முதல் 40 புகார்கள் வருகின்றன. பெரும்பாலும் குப்பை அள்ளுவது தொடர்பாகவும் தண்ணீர் உடைப்பு ஏற்பட்டு இருப்பது தொடர்பாகவும் புகார்கள் வந்துள்ளன.  பொதுமக்கள் தங்களது புகாரை  வாட்ஸ் அப்பில் புகைப்படத்துடன் இந்த எண்ணிற்கு அனுப்பி விடுகின்றனர்.

புகாரை பெற்றுக் கொள்ளும் அதிகாரிகள் உடனடியாக அதை பெற்றுக் கொண்டோம் என்று பதிலுக்கு மெசேஜ் அனுப்பு கின்றனர். அதன்பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த புகார் பகிரப்படுகிறது. அதனடிப்படையில் சம்மந்தப்பட்ட இடத்திற்கு மனசு பணியாளர்கள் சென்று குப்பையை அள்ளி வருகின்றனர். பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் அதையும் சுத்தம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-

பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில் வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரடியாக வருவது மிச்சப்படுத்தப்படும்.

பெரும்பாலும் இந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு இதுவரை குப்பை அள்ளுதல் சாக்கடை உடைப்பு ஏற்பட்டதால் தொடர்பாக ஏகப்பட்ட புகார்கள் வந்துள்ளன. புகார்கள் வந்த உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அதற்குத் தீர்வு காணப்பட்டு வருகிறது.

இதுவரை 150-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. மேலும் தடுப்பூசி போடுவது சம்பந்தமாகவும் சிலர் தங்களது சந்தேகங்களை தீர்த்து வருகின்றனர். இந்த திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. உடனடியாக முடித்து வைக்கப்படும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணப்படும்.

புத்தகமாக ஒரு சிலர் எங்கள் பகுதியில் ரோடு வசதி இல்லை  என்று புகார் அளித்துள்ளனர். இன்னும் சிலர் எங்கள் பகுதி குண்டும் குழியுமாக உள்ளது என்றும் புகார் அளித்துள்ளனர் அந்தப் பகுதிக்கு அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள்.

Top