logo
 கொரோனாவைத் தடுக்க  சத்துள்ள பாரம்பரிய   உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்: திருச்சி சரக டிஐஜி ஆனிவிஜயா

கொரோனாவைத் தடுக்க சத்துள்ள பாரம்பரிய உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்: திருச்சி சரக டிஐஜி ஆனிவிஜயா

11/May/2021 06:26:18

புதுக்கோட்டை, மே: கொரோனாவைத்தடுக்க சத்துள்ள  பாரம்பரிய  உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார் திருச்சி சரக டிஐஜி ஆனிவிஜயா.

கொரோனா தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மனிதாபிமானத்துடன் பணியாற்றவும், குற்றச்செயல்களைத் தடுக்கவும் அரசின் சார்பில் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு  இரு சக்கர வாகனங்கள் மற்றும் பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் லோக. பாலாஜி சரவணன் முன்னிலையில் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 

இதில், திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா கலந்து கொண்டு  தமிழக அரசின் சார்பாக காவல் உதவி ஆய்வாளர்களுக்கு 22 இரு சக்கர வாகனங்களும், Barricades, ஒளிரும் சமிஞ்சை விளக்கு(Batton light). ஒளிரும் ஜாக்கெட்(Reflecting Jacket),  போக்குவரத்து சாதன உபகரணங்கள் (Traffic Equipment’s),  சூரிய ஒளி விளக்குகள்  (Solar Sign Board)  முதலிய உபகரணங்களை வழங்கி பேசுகையில், கொரோனா தொற்றை தடுக்க சத்தான உணவுகளை அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் ஒவ்வொரு விதமான பயிற்சிகளை செய்ய வேண்டும். பழங்காலத்தில்  பாட்டி சொன்ன வைத்திய முறைகளைப் பின்பற்ற வேண்டும். நோய் எதிர்ப்பு சத்துள்ள பாரம்பரிய உணவுகளை சாப்பிட வேண்டும். சுத்தம் சுகாதாரம் அவசியம். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்நல்ல ஆரோக்கியத்துக்கு  நல்ல எண்ணங்கள் இருந்தால் போதும். எல்லாமே நல்லதாகவே நடக்கும் என்றார்.

 

நிகழ்வில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்  கீதாஜெரினாபேகம்இராஜேந்திரன், காவல் துணை கண்காணிப்பா ளர்கள் செந்தில்குமார், ராஜகோபால் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

Top