07/Jul/2021 10:34:00
புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர்.கவிதா ராமு அவர்களை நேரில் சந்தித்து பொற்பனைக்கோட்டையில் விரைவில் தொடங்கப்படவுள்ள அகழ்வாய்வுப்பணி தொடர்பாக மனு அளித்தனர்.
இந்த நிகழ்வில், அகழ்வாய்வு இயக்குநர் பேராசிரியர் இ.இனியன், தொல்லியல் ஆய்வுக் கழகத்தலைவர் கரு.ராசேந்திரன், தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் ஆ.மணிகண்டன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத்தலைவர் எம்.ராஜாங்கம், தொல்லியல் ஆய்வுக்கழக உறுப்பினர் கவிஞர்.பீர்முகமது ஆகியோர் பங்கேற்றனர்.