logo
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்: ஈரோட்டில் 4-ஆவது நாளாக கனிமொழி  பிரசார பயணம்

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்: ஈரோட்டில் 4-ஆவது நாளாக கனிமொழி பிரசார பயணம்

03/Dec/2020 09:15:03

ஈரோடு: விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தி.மு.க சார்பில் 4 நாட்கள் பிரசார பயணத்தை தி.மு.க மகளிர் அணி செயலாளரும், நாடாளுமன்ற குழுவின் துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி.ஈரோட்டில் தொடங்கியுள்ளார். 4 -வது நாளாக தனது பிரசார பயணத்தை  கோபி அருகே குள்ளம்பாளையம் பிரிவில் தொடங்கினார். 

ஈரோடு  தி.மு.க.வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் நிர்வாகிகள் கனிமொழிக்கு வரவேற்பு அளித்தனர்.  இதில் குள்ளம்பாளையம் கே.கே. செல்வம் உள்பட ஏராளமான நிர்வாகிகள் உடனிருந்தனர். பின்னர் அவர் உடல்நலக்குறைவால் இறந்த முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ. வெங்கடு வீட்டிற்கு சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதைத்தொடர்ந்து அரசூர் சென்ற கனிமொழி எம்.பி. பொதுமக்களை சந்தித்து பேசினார்.

இதைத் தொடர்ந்து, சத்தியமங்கலத்துக்கு சென்ற அவர் புகழ்பெற்ற பூ மார்க்கெட்டிற்கு சென்று அங்குள வியாபாரிகளிடம் கலந்துரையாடினார். அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பூ மார்க்கெட் வியாபாரிகள் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். அப்போது தி.மு.க .ஆட்சிக்கு வந்ததும் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கனிமொழி எம்.பி. உறுதியளித்தார். 

அதைத்தொடர்ந்து தொட்டபுரம் சென்ற அவர் அங்குள்ள காலனி மக்களிடம் கலந்துரையாடினார்.  பின்னர் தாளவாடிக்கு  சென்ற கனிமொழி எம்.பி. பொதுமக்களையும், விவசாயிகளையும்  சந்தித்து பேசினார். பின்னர் கோம்பு பாளையம் சென்ற அவர் தொண்டு நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பின்னர் அங்கு மதிய உணவை முடித்துக்கொண்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

அதைத் தொடர்ந்து பிற்பகல் கோபி சென்ற கனிமொழி எம்.பி.அங்கு பொதுமக்களையும் ஆட்டோ டிரைவர்கைளையும் சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து கொங்கர்பாளையம் சொல்லும் அவர் மக்களை சந்தித்தார். தொடர்ந்து டி.என்.பாளையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நம்பியூர் சென்று பொதுமக்களை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 4  நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டார். 


Top