logo
ஈரோடு ஹவுசிங் யூனிட் குடியிருப்பில் அடிப்படை வசதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன்ஈவெரா வாக்குறுதி

ஈரோடு ஹவுசிங் யூனிட் குடியிருப்பில் அடிப்படை வசதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன்ஈவெரா வாக்குறுதி

29/Mar/2021 07:30:23

ஈரோடு, மார்ச்:ஈரோடு ஹவுசிங் யூனிட் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா வாக்குறுதி அளித்தார்.


ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா, நேற்று பெரியவலசு நால் ரோடு, கொத்துக்காரர் வீதி, பெரியவலசு, பாங்கிக்காரர் தோட்டம், வள்ளியம்மை வீதி, இந்திரா நகர், மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

அங்கு வேட்பாளர் திருமகன் ஈவெரா பேசியதாவது:

ஈரோடு மாநகராட்சி பகுதி போல விரிவாக்க பகுதிகளான பெரியவலசு, கொங்கு நகர், மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி, குமலன் குட்டை விரிவாக்கம், நசியனுார் சாலை, ஹவுசிங் யூனிட் பகுதியில் அடிப்படை வசதி மேம்படுத்தப்படும்.

பிரதான வீதிகளில் அரசு, தனியார் பஸ் போக்குவரத்து இருந்தாலும், உட்புற குடியிருப்புகளுக்கு போக்குவரத்து வசதி இல்லை. அப்பகுதிக்கு மினிபஸ் இயக்குவதுடன், புதிய வழித்தடங்கள் ஏற்படுத்தப்படும். வரும் காலங்களில் மாநகராட்சி பகுதிக்குள் ஏற்படுத்தப்படும் திட்டப்பணிகளைப்போல, இங்கும் புதிய பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்க ஏற்பாடு செய்வேன்.

பெருந்துறை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஏற்கனவே திட்டமிடப்பட்டு கிடப்பில் உள்ள மேம்பாலம் அமைக்கும் பணியை, தி.மு.க., ஆட்சி அமைந்ததும், விரைவாக துவங்கி முடிக்கப்படும். வரும் நாட்களில் அந்தந்த பகுதிக்கு குறிப்பிட்ட நாளில் வருகை புரிந்து, மக்களிடம் கோரிக்கை மனுக்கள், புகார்களை பெற்று தீர்வு காண, கை சின்னத்தில் எனக்கு ஓட்டுப்போட்டு வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார். தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் மனைவியும், வேட்பாளரின் தாயாருமான வரலட்சுமி, பி.எஸ்.பார்க்கில் உள்ள சி.எஸ்.ஐ., பிரப் சர்ச்சில் பிரார்த்தனை முடிந்து திரும்பியவர்களிடம்  வாக்கு சேகரித்தார்.

Top