14/Jul/2021 11:06:45
புதுக்கோட்டை, ஜூலை: அரசு நிர்ணயித்த தொகையைவிட கூடுதலாக கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டுவரும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியா மற்றும் நிர்வாகிகள் கார்த்திகாதேவி, நித்திஷ்குமார், சந்தோஷ், வைஷ்ணவி, வைரமணி, லக்சாகினி உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்ட முடிவில் முதன்மைக் கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது