logo
வரத்தை விட பாசனத்துக்கு அதிக நீர் திறப்பால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

வரத்தை விட பாசனத்துக்கு அதிக நீர் திறப்பால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

20/Dec/2020 11:01:08

ஈரோடு, டிச: ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் விளை நிலங்களின் வாழ்வாதாரமாகவும் பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு வரும் நீர் வரத்து குறைந்து உள்ளது.

 மேலும்அணையின் நீர் வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. ஞாயிறு காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 94.56 அடியாக உள்ளது.

அணைக்கு வினாடி 1144 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலுக்கு 2300 கனஅடியும், பவானி ஆற்றுக்கு 50 கனஅடியும் என மொத்தம் 2350 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குண்டேரிப்பள்ளம் அணை-36.60 அடியாகவும், பெரும்பள்ளம் - 12.07 அடியாகவும், வரட்டுப்பள்ளம் - 29.79 அடியாகவும் உள்ளது. 


Top