logo
பவானிசாகர் அணை பகுதியில் எம்.ஏ. ஈஸ்வரனுக்கு சிலை அமைக்க முதல்வரிடம் தமாகா வலியுறுத்தல்

பவானிசாகர் அணை பகுதியில் எம்.ஏ. ஈஸ்வரனுக்கு சிலை அமைக்க முதல்வரிடம் தமாகா வலியுறுத்தல்

08/Jan/2021 10:37:58

ஈரோடு, ஜன: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வில்லரசம்பட்டியில் உள்ள ரிசார்ட்டில் தொழில்முனைவோர்கள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

அப்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர் தலைமையில் நிர்வாகிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை  சந்தித்து  கோரிக்கை மனு கொடுத்தனர். 

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:கீழ்பவானி பாசன திட்டத்திற்கு வித்திட்ட தியாகி எம்.ஏ.ஈஸ்வரனுக்கு பவானிசாகர் மற்றும் காலிங்கராயன் இல்லத்தில் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மாநகர பகுதியில் கட்டி முடிக்கப்பட்டு  திறக்கப்படாமல் உள்ள குடிசை மாற்று வாரியம் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீடுகளை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகர் பகுதியில் புதிய குடிநீர் இணைப்புக்காகவும், கேபிள் மின் இணைப்புகாகவும், புதை சாக்கடை திட்டத்திற்கும் தோண்டி எடுக்கப்பட்ட தார் சாலைகளை விரைந்து நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும். பெருந்துறை செங்கப்பள்ளி முதல் பவானி வரை தேசிய நெடுஞ்சாலையில்  உள்ள இணைப்பு சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதை சீர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.

மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ் .டி .சந்திரசேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ், ஈரோடு மத்திய மாவட்டத் தலைவர் விஜயகுமார், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், வட்டார தலைவர் புவனேஸ்வரன், ரபிக், சம்பத்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர். 


Top