logo
ஈரோடு பெரும்பள்ளம்  ஓடை  குடியிருப்பு பகுதிகளில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு

ஈரோடு பெரும்பள்ளம் ஓடை குடியிருப்பு பகுதிகளில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு

04/Jul/2021 01:32:21

ஈரோடு, ஜூலை: ஈரோடு அருகே பெரும்பள்ளம் ஓடை குடியிருப்பு பகுதியில் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு அடுத்துள்ள செங்கோடம்பள்ளம் பகுதியில் உள்ள பெரும்பள்ளம் ஓடையையொட்டி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதில் ஒருசிலர் ஓடையை ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டி குடியிருந்து வந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் ஓடையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு வேறு ஒரு மாற்று இடம் ஏற்படுத்தித்தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் இன்று தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஓடையையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது ஆக்கிரமிப்பினால் வீடுகளை இழந்த கும்பத்தினரை சந்தித்து மாற்று இடம் வழங்குவது தொடர்பாக ஆலோசிப்பதாக கூறினார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் இருந்தனர்.

Top