logo
புதுக்கோட்டை  தன்னார்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவர் அறக்கட்டளையினர்  உணவு வழங்கல்

புதுக்கோட்டை தன்னார்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவர் அறக்கட்டளையினர் உணவு வழங்கல்

28/May/2021 03:32:41

புதுக்கோட்டை, மே : புதுக்கோட்டை  தன்னார்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவர் அறக்கட்டளையினர்  பசியால் வாடும் ஏழைகளுக்கு  மதிய உணவு வழங்கினர்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்மா மருந்தகம் அருகில், கொரனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து  பசியோடு இருப்பவர்களுக்கு   தன்னார்வ பயிலும் வட்ட முன்னாள் மாணவர் அறக்கட்டளை சார்பில்  அட்சய பாத்திரம் திட்டம்  மூலம் மதிய உணவு பொட்டலங்கள், குடிநீரும்  வழங்கப்படுகிறது.

இது குறித்து அறக்கட்டளையின்  நிர்வாகிகள் புவனேஸ்வரன், சுரேஷ்குமார் மற்றும் சீனிவாசன் ஆகியோர்  கூறியது: அட்சய பாத்திரம் திட்டம் மூலம்  இந்த இடத்தில்  தினந்தோறும் 75 பேருக்கு உணவுப்பொட்டலங்கள் வைக்கப்படுகிறது. பசியோடு இருப்பவர்கள் உணவை எடுத்துக்கொள்ளலாம்  என்று அறக்கட்டளை நண்பர்கள் இப்பகுதியில் உள்ளவர்களிடம் அறிவிக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து  உணவு கிடைக்காமல் பசியுடன் இருப்பவர்கள் இந்த  உணவுப்பொட்டலங்களை எடுத்து பசியாறுகின்றனர்முதலில் 50 பொட்டலங்கள் வைக்கப்பட்டதுதற்போது 75 பொட்டலங்கள் வைத்திருக்கிறோம். தேவைக்கேற்ப கூடுதலாக வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்பொது முடக்கம் முடியும்வரை இந்தத் திட்டம்  தொடரும் என்றும் நிர்வாகிகள், தெரிவித்தனர்.

இதைத்தவிர பொது முடக்கத்தால் பாதிப்புள்ளாகியிருக்கும் கிராமப்புறத்தில் இருக்கும் 50 குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு அரிசி, கோதுமை மாவு  மற்றும் மளிகை பொருட்கள் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

 

Top