logo
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசூர குடிநீர் விநியோகம்

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசூர குடிநீர் விநியோகம்

19/Apr/2021 07:22:48

ஈரோடு,ஏப்: ஈரோடு தெற்கு மாவட்ட  திமுக சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசூர குடிநீர் வழங்கப்பட்டது.

 கொரானா தொற்றின் இரண்டாவது அலையின் பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்தியுள்ளனர். அந்த வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகினறனர். அதேபோல் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் பொது மக்களுக்கு முக கவசம் கபசுர குடிநீர் கிருமிநாசினி ஆகியவற்றை  வழங்கி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில்  மொடக்குறிச்சி மேற்கு  ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமையில் அவல்பூந்துறையில் பொதுமக்களுக்கு முககவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர்  சச்சிதானந்தம், .தெற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சண்முகம் தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் கதிர்வேல், விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Top