logo
ஈரோடு கொரோனா ஸ்கிரீனிங் மையத்தில் புதிய எந்திரம் பொருத்தம் பரிசோதனை தொடங்கியது

ஈரோடு கொரோனா ஸ்கிரீனிங் மையத்தில் புதிய எந்திரம் பொருத்தம் பரிசோதனை தொடங்கியது

12/May/2021 06:52:26

ஈரோடு, மே: ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மண்டபத்தில் உள்ள கொரோனா ஸ்கிரீனிங் மையத்தில் புதிய எந்திரம் பொருத்தும் பரிசோதனை தொடங்கியது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு தொற்று நுரையீரலில் ஏற்படுத்தும் பாதிப்பை கண்டறியும் வகையில் ஸ்கிரீனிங் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனா பாதித்த நோயாளிகள் அழைத்து வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை, நுரையீரல் எனவகையான பரிசோதனைகள் செய்யப்பட்டு அவர்களுக்கு நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் லேசன் அறிகுறி உள்ளவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை தேவைப்படுவோருக்கு பெருந்துறை மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இங்கு தினமும் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்தப் பரிசோதனை எந்திரம் திடீரென பழுதானது. இதனால் இந்த ஸ்கேன் மையத்தில் பரிசோதனை செய்ய முடியாமல் இருந்தது. எந்திரம் அதிக அளவு சூடானதால் பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில் இரவு பழுதான எந்திரத்திற்கு பதில் புதிய எந்திரம் வரவழைக்கப்பட்டு மீண்டும் பரிசோதனை தொடங்கியது.

Top