logo
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4.20 லட்சம் பேருக்கு தடுப்பூசி: தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற மக்கள்

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4.20 லட்சம் பேருக்கு தடுப்பூசி: தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற மக்கள்

30/Jun/2021 10:54:22

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4.20 லட்சம் பேருக்கு தடுப்பூசி: தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டதால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.  

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்க அரசின் உத்தரவின்பேரில், மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன்காரணமாக மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை படிப்படையாக குறைந்து வருகிறது

கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் தற்போது வரை 4 லட்சத்து 22 ஆயிரத்து 994 பேருக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். தடுப்பூசி போடும் முகாம்களில் நள்ளிரவு முதலே  குவிய தொடங்கி விடுகின்றனர். நள்ளிரவு ஒரு மணி முதல் வரிசையில் இடம் பிடிக்கின்றனர். இதனால், மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையிலும், சிரமமின்றி தடுப்பூசி போடுவதற்காகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி கடந்த 24-ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

அதன்படி ஈரோட்டில் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினசரி தலா 20 வார்டுகளில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இதேபோல் புறநகர்ப் பகுதிகளிலும் தடுப்பூசி போடப்படும் முகாம்கள் அதிகரிக்கப்பட்டிருந்தது. தடுப்பூசிகள் கையிருப்பு தகுந்தார் போல் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது.

கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் கடந்த 27, 28 ஆகிய  இரண்டு நாட்களாக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவில்லைசெவ்வாய்க்கிழமை மாவட்டம் முழுவதும் 105 மையங்களில் 10,500 பேருக்கு கோவிஷில்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது

இந்நிலையில் புதன்கிழமை  தடுப்பூசி போடப்படும் என்று பொதுமக்கள் நள்ளிரவு முதலே தடுப்பூசி போடும் மையங்களில் வழக்கம்போல குவிய தொடங்கினர். ஆனால் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக  அந்தந்த தடுப்புசி மய்யங்கள் முன்பு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

அதில் கையிருப்பு இல்லாததால் இந்த தடுப்பூசி போடப்பட வில்லை எனவும் எழுதி வைக்கப்பட்டிருந்தது. இதனால் தடுப்பூசி போட  வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Top