logo
திமுக துணைப்பொதுச்செயலர் சுப்புலட்சுமி ஜெகதீசனுடன்  பல்வேறு  பொது அமைப்பினர் சந்திப்பு

திமுக துணைப்பொதுச்செயலர் சுப்புலட்சுமி ஜெகதீசனுடன் பல்வேறு பொது அமைப்பினர் சந்திப்பு

04/May/2021 10:44:56

ஈரோடு, மே: திராவிட இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும் திமுக வின் துணைப் பொதுச் செயலாளராகவும்  செயலாற்றி வரும்  சுப்புலட்சுமி ஜெகதீசனை  பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த  நிர்வாகிகள் கி.வே.பொன்னையன், கண.குறிஞ்சி.இரத்தினசாமிஅமரியோன்(பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு),  சுப்புஅரச்சலூர் செல்வம்தங்கராசுமொடக்குறிச்சி கண்ணுசாமி, .அர்ச்சுணன், சத்தியமூர்த்தி (அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு) ஆகியோர் குழுவாகச்சென்று ஈரோட்டில் உள்ள இல்லத்தில் செவ்வாய்கிழமை  நேரில் சந்தித்தனர்.

இதில்மொடக்குறிச்சி தேர்தல் கள நிலவரம் பற்றியும் தமிழகத் தேர்தலில் முன் வைக்கப்பட்ட அரசியல் குறித்தும் பல்வேறு செய்திகளை பரிமாறிக்கொண்டனர். அதில் தேர்தலில் போட்டியிட்ட  சுப்புலட்சுமி  ஜெகதீசன் 281  மட்டுமே குறைவாகப் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தது. அதே வேளையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள்  14,000.   இந்த வாக்குகள் தமிழ், தமிழ் நிலம் தமிழர்கள் உரிமை ஆகியவற்றின் மீது மிகுந்த அக்கறை கொண்ட இளைய தலைமுறையின் வாக்குகள்.

 

சுப்புலட்சுமி ஜெகதீசன் தம்பதியர் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்ததற்காக 1992 -களில் தடா கொடுஞ்சிறையில் ஓராண்டு அடைக்கப்பட்டிருந்தது பற்றியோ, அதற்கான வழக்கிற்கு ஆண்டுக் கணக்கில் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் சென்று வந்ததையோ, 1996 திமுக ஆட்சியமைத்த போது தடா வழக்குக் காரணமாக அமைச்சர் ஆக இயலாமல் போனதை யோ அறியாதவர்கள்.பெரும்பாலான வாக்காளர்கள் இந்த நிகழ்விற்கு பின்னர் பிறந்தவர்கள்அதே போல திமுக  தமிழர் நலன் காக்கும் கட்சி என்ற நம்பிக்கையை இழந்தவர்கள் தான் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கின்றனர்.

 திமுக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் இரவீந்திரன் கூறியதைப்போல  நாம் தமிழர் கட்சி  போன்ற இயக்கங்கள்தான் எங்களை நாங்களே சுத்திகரித்துக்கொள்ள  உதவுகிறது என்றார்பேராசிரியர் இரவீந்திரன் கூற்றுப்படி திமுக தன்னை கொள்கை வழியில் சுத்திகரித்துக் கொண்டால் மட்டுமே  வருங்காலத்தில் சனாதன பாஜக வை எதிர்கொள்ள முடியும். 2021 சட்டமன்றத் தேர்தல் திமுகவிற்கு ஒரு நெருப்புச் சோதனை என்பது போன்ற விஷயங்கள் இந்த சந்திப்பில்  பேசப்பட்டன.

இதையடுத்துதியாகி முத்துக்குமாரின் வழ்க்கை வரலாறை பேசும் அவரை வளர்த்தெடுத்த தோழர் .கலைச்செல்வன் அவர்கள் எழுதிய -முத்துக்குமார் நெருப்பாய் வாழ்ந்தவன்- என்ற நூல்  பரிசளிக்கப்பட்டது.

இந்த ந்திப்பின்போது திமுக இளைஞர் அணி மாவட்ட பொறுப்பாளர் சிவகிரி . பிரகாசு, இலக்கிய அணி இளங்கவி  ஆகியோர் உடனிருந்தனர்.

Top