logo
கோவிட் தொற்றால் உயிரிழந்த ஆதிதிராவிடர் குடும்பத்தில் வருமானம் ஈட்டக் கூடிய நபரின் குடும்பத்துக்கு  கடனுதவி.

கோவிட் தொற்றால் உயிரிழந்த ஆதிதிராவிடர் குடும்பத்தில் வருமானம் ஈட்டக் கூடிய நபரின் குடும்பத்துக்கு கடனுதவி.

26/Jun/2021 12:14:18


புதுக்கோட்டை, ஜூன்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் குடும்பத்தில் வருமானம் ஈட்டக் கூடிய நபர் கோவிட் தொற்றால் உயிரிழந்திருப்பின் அவர்களது குடும்பத்துக்கு  கடன்தொகை  வழங்கப்பட உள்ளது. 

  இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதாராமு வெளியிட்ட தகவல்:

ஆதிதிராவிடர் மக்கள்  கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி குடும்பத்தில்  வருமானம் ஈட்டக்கூடிய  நபர் இறந்திருப்பின்  அவர்களின்   குடும்ப வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில்  தேசிய பட்டியலினத்தவர் நிதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்  (NSFDC)  நிறுவனத்தால ASHA என்ற திரும்பச் செலுத்தும் கடன் திட்டம் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

 இத்திட்டத்தின் கீழ்  கடன் பெறுவதற்கு பயனாளி ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேணடும்  குடும்ப ஆண்டு  வருமானம் ரூ.3 இலட்சத்துக்குள்  இருக்க வேணடும். கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி இறந்தவர் குடும்பத்தின் வருமானம் ஈட்டக்கூடியவராகவும்  வயது 18 முதல்  60 -க்குள் இருந்திருக்க வேண்டும்.  இத்திட்டத்தில்  அதிகபட்சமாக திட்டத்  தொகை ரூ.5 இலட்சம் வரை  வரை இருக்கலாம்.

மேலும்,  திட்டத்தொகைம 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.4 இலட்சம் வரை கடன்  NSFDC  நிறுவனத்தால் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது  ரூ.1  லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

இக்கடனுக்கு ஆணடுக்கு  6.5 சதவீதம் என்ற வட்டி  விகிதத்தில் கடனை 6 ஆணடுகளுக்குள்  திரும்பச் செலுத்தலாம். கொரொனா தொற்றினால்தான் இறந்துள்ளார் என்பதற்கான ஆவணங்கள்  சமர்ப்பிக்க வேணடும்.  இச்சான்று சம்பந்தப்பட்ட  கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் வட்டாட்சியரிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

 இதில் பயன்பெற விரும்புவோர் உரிய ஆவணங்களுடன்  மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலகத்தையோ அல்லது     04322- 221487 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம்.

 

Top