logo
நாடாளுமன்ற தேர்தலில் திமுகவினர் மக்களை ஏமாற்றி  குறுக்கு வழியில் வெற்றி பெற்றனர்: அந்தியூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவினர் மக்களை ஏமாற்றி குறுக்கு வழியில் வெற்றி பெற்றனர்: அந்தியூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

06/Jan/2021 11:26:49

அந்தியூர்: அந்தியூரில்  நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  பேசியதாவது: விவசாயிகள் சிரமம் இன்றி வாழவும்,  வளமாக வாழவும் அம்மா தலைமையிலான அரசு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

விவசாயிகள் ஏழை மக்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ம் தைப் பொங்கலை யொட்டி ரூ 2,500 ரொக்க பணமும், ஒரு முழுக் கரும்பு, ஏலக்காய் ,சர்க்கரை வழங்கும் மகத்தான திட்டத்தை இந்த அரசு கொண்டு வந்துள்ளது. அரசு பள்ளியில் 41 சதவீத மாணவர்கள் படித்து வருகின்றனர். 

கடந்த ஆண்டில் அரசு பள்ளியில் படித்த 6 மாணவர்கள் மட்டுமே மருத்துவரின் படிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவர்  கனவை நினைவாக்கும் வகையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.  இதன் மூலம் 313 அரசு பள்ளி மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர  இடம்  கிடைத்தது. இதைப்போல் 92 மாணவர்களுக்கு பல் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது.

 தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் கூடுதலாக 150 மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கும். எனவே அடுத்த ஆண்டு 445 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும்  அரசு நமது அரசு. 

 2006-ஆம் ஆண்டில் நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்குவதாக திமுகவினர் கூறினர். எவ்வளவு நிலம் கொடுத்துள்ளனர். அவர்கள் கவர்ச்சிகரமான திட்டங்களை மட்டுமே அறிவிப்பார்கள் செயல்படுத்த மாட்டார்கள். எம்ஜிஆர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நமது அரசு சிந்தாமல் சிதறாமல் செயல்படுத்தி வருகிறது. வேளாண்மை மக்களுக்கு இயந்திரங்கள் மானிய விலையில் டிராக்டர் வழங்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு திட்டம் மூலம் இந்தியாவிலேயே அதிகமான இழப்பீடு தொகையை  பெற்று தந்த ஒரே அரசு நமது அரசு தான்.

மேலும், தமிழம் முழுவதும் ஒரே நேரத்தில் 2 ஆயிரம்  அம்மா மினி கிளினிக்கை திறந்து வரலாறு படைத்தோம். இந்தத் திட்டத்தையும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் குறை கூறுகிறார். மருத்துவர்கள் செவிலியர்கள் போதுமான அளவு நியமிக்கப்பட்டு உள்ளார்களா என்று கேட்கிறார். எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை குறை கூறுவதில் குறியாக இருக்கிறார்.

 மு .க .ஸ்டாலின். மக்கள் கூட்டத்தைக் கூட்டி மனுக்களை வாங்குகிறார். நிறைவேற்ற  முடியாத திட்டங்கள் பற்றி கூறி வருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவினர் தமிழக வளர்ச்சிக்காக ஒரு குரலாவது கொடுத்தார்களா? அல்லது திட்டங்கள் குறித்து தான் பேசினார்களா?. எதுவும் இல்லை. மக்களை ஏமாற்றி மோசடி செய்து குறுக்கு வழியில் நாடாளு மன்ற தேர்தலில் திமுக வினர் வெற்றி பெற்றனர்.

ஆனால் சட்டமன்றத் தேர்தல் அப்படி இல்லை. மக்கள் திட்டங்களை நிறைவேற்றும் அரசை வரவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை இந்த அரசு செய்து வருகிறது. அம்மாவின் இரு சக்கர வாகனம்   திட்டத்தில் இதுவரை  3 லட்சம் பெண் பயனாளிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளது.

மாதம் ஆயிரம் பெரும் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி இதுவரை 5 லட்சம் பேருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இதில் 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்து அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

காப்பீடு திட்டம் மூலம் முன்பு ரூ.2 லட்சம் வரை மட்டுமே சிகிச்சை பெற முடியும். அதை இந்த அரசு ரூ. 5 லட்சமாக உயர்த்தி  நஞ்சை புளியம்பட்டியில் ரூ.15 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இலவச சைக்கிள்கள் இலவச புத்தகங்கள் மடிக்கணினி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

 ஒரு மடிக்கணினி ரூ.12,000  மதிப்பு ஆகும். வசதி படைத்தவர்கள் மடிக்கணினி எளிதாக வாங்க முடியும் ஆனால் ஏழை மாணவர்கள் வாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். அவர்களுக்காக இந்த அற்புதமான திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார்.

இதுவரை 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. திறமையான மாணவர்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு இருக்க மு.க. ஸ்டாலின் பொய்யான அறிக்கைகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். 

திமுக என்றாலே அராஜகம், கட்டப்பஞ்சாயத்து தான் இருக்கும். மக்கள் நிம்மதியாக நடமாட முடியாது. ஆனால் அதிமுகவில் யார் தப்பு செய்தாலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து துறையிலும் வளர்ச்சி அடைந்து முதன்மை மாநிலமாக உள்ளது.

2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சிக் காலத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதனால் தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அப்போது தேர்தல் சுற்றுப்பயணம் செய்த ஜெயலலிதா தமிழ்நாட்டின் மின் மிகை மாநிலமாக மாற்றுவதாக உறுதி அளித்தார்.

அதன்படி  தமிழ்நாடு மின் மிகைமாநிலமாக உள்ளது. மின்சாரம் தடை தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.மும்முனை மின்சாரம் உற்பத்தியாகி வருகிறது. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


Top