logo
மாற்றுதிறனாளிக்கு உதயநிதி ஸ்டாலின் மன்றத்தினர் உதவி.

மாற்றுதிறனாளிக்கு உதயநிதி ஸ்டாலின் மன்றத்தினர் உதவி.

26/Sep/2020 06:47:01

news by s.senthilkumar..

புதுக்கோட்டையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவர் கொரோனா ஊரடங்கால்  வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்ததை அறிந்த உதயநிதி ஸ்டாலின் மன்றத்தினர் அவருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். 

புதுக்கோட்டை கோவில்ப்பட்டி பகுதியை  சேர்ந்தவர்  மாற்றுத்திறனாளி ரமேஷ். கொரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் தனது வாழ்வாதாத்தை இழந்து தவித்து வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த  புதுக்கோட்டை  மாவட்ட  உதயநிதி ஸ்டாலின் ரசிகர்  மன்றத்தின் நிர்வாகி  குறளோவியன் தலைமையில் நிர்வாகிகள்  ரமேஷின் வீட்டுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அரசி பருப்பு  மளிகை பொருட்கள் போன்ற  அத்தியாவசிய பொருட்களை  மாற்றுதிறனாளியான ரமேஷின் வீட்டுக்கு  நேரில் சென்று  வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற  நிர்வாகிகள்  தெய்வானை, அஞ்சான் சரத், ஜெய் ஸ்டாலின்,  ரியாஸ் கான் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.    

Top