logo
கரூர் மாவட்டத்தில், சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் மூலம் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் மின்னணு அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

கரூர் மாவட்டத்தில், சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் மூலம் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் மின்னணு அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

25/Jun/2021 12:58:37

கரூர், ஜூன்: கரூர் மாவட்டத்தில், சிறப்பு சுருக்க முறைத்திருத்தம்(2021) மூலம் பட்டியலில் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் மின்னணு அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 இது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் . பிரபுசங்கர் வெளியிட்ட தகவல்:

 கரூர் மாவட்டத்தில், சிறப்பு சுருக்க முறைத்திருத்தம்(2021) மூலம் வாக்காளர்களாக பதிவு செய்ய விண்ணப்பம் செய்த புதிய வாக்காளர்கள், தகுதியின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், செல்போன் எண்களுடன் விண்ணப்பம் சமர்ப்பித்த 22,470 புதிய வாக்காளர்களும் தங்களது மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை  NVSP/VHA மூலமாக பதிவிறக்கம்  செய்து கொள்வதற்கு ஏற்றவாறு கடந்த 13.3.2021 மற்றும் 14.3.2021 ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி நிலையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

எனினும், கரூர் மாவட்டத்தில் இதுவரை 1813 புதிய வாக்காளர்கள்  மட்டுமே தங்களது  மின்னணு வாக்காளர் அடையாள அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

எனவே, சிறப்பு சுருக்கமுறைத்திருத்தம்-2021-ல் புதிய வாக்காளர்களாக செல்போன் எண்ணுடன் பதிவு செய்துள்ள அனைத்து  வாக்காளர்களும்,  இந்திய தேர்தல் ஆணைய இணையதள முகவரியான   www.nvsp.in  மற்றும் Voter Help Line Mobile App  என்ற செயலி மூலமாக  மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை (e-EPIC) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Top