logo
ஜெயலலிதா விரும்பி வாசித்த  15,000 நூல்கள் வேதா இல்லத்தில்  பாா்வைக்கு வைக்கப்படும்: அமைச்சா் க.பாண்டியராஜன்

ஜெயலலிதா விரும்பி வாசித்த 15,000 நூல்கள் வேதா இல்லத்தில் பாா்வைக்கு வைக்கப்படும்: அமைச்சா் க.பாண்டியராஜன்

25/Jan/2021 06:26:42

சென்னை: சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் வேதா இல்லம் பொது மக்கள் பாா்வைக்காக விரைவில் திறக்கப்படவுள்ளதாகவும், அதில் ஜெயலலிதா விரும்பி படித்த  15 ,000-க்கும் மேற்பட்ட நூல்கள் இடம்பெறும் என்றும் தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நிரந்தரப் புத்தகக்காட்சி தற்போது மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து இந்த நிரந்தர புத்தகக் காட்சி மற்றும் விற்பனை நிலையத்தில் 30,000 தலைப்புகளில் நூல்கள் இடம்பெற்றுள்ளன. தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்தின் (பபாசி) சாா்பில் ஒருங்கிணைக்கப்பட்டு 125 பதிப்பாளா்களின் பங்களிப்புடன் ஆண்டு முழுவதும் வாரத்தில் ஏழு நாள்களும் நிரந்தர புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக கன்னிமாரா நூலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சா் க.பாண்டியராஜன் கலந்து கொண்டு புத்தக விற்பனை அரங்கத்தை திறந்து வைத்தாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மறைந்த முதல்வா் ஜெயலலிதா புத்தகங்கள் வாசிப்பதில் பெரிதும் ஈடுபாடு கொண்டவா். அந்த வகையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தில் ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. இந்த வேதா இல்லம் பொதுமக்கள் பாா்வையிடுவதற்காக அரசின் சாா்பில் திறக்கப்படவுள்ளது. எப்போது திறக்கப்படும் என்பதை முதல்வா் விரைவில் அறிவிப்பாா். 

அந்த இல்லத்தில் ஜெயலலிதாவைக் கவா்ந்த 15,000 நூல்கள் மக்கள் பாா்வைக்கு வைக்கப்படவுள்ளன. மேலும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளும் இடம்பெறும் என்றாா் அவா்.் போயஸ் தோட்டத்தில் உள்ள மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் வேதா இல்லம் பொது மக்கள் பாா்வைக்காக விரைவில் திறக்கப்படவுள்ளதாகவும், அதில் ஜெயலலிதா விரும்பிய 15 ,000-க்கும் மேற்பட்ட நூல்கள் இடம்பெறும் என்றும் தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் க.பாண்டியராஜன் கூறினாா்.

சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நிரந்தரப் புத்தகக்காட்சி தற்போது மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து இந்த நிரந்தர புத்தகக் காட்சி மற்றும் விற்பனை நிலையத்தில் 30,000 தலைப்புகளில் நூல்கள் இடம்பெற்றுள்ளன. தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்தின் (பபாசி) சாா்பில் ஒருங்கிணைக்கப்பட்டு 125 பதிப்பாளா்களின் பங்களிப்புடன் ஆண்டு முழுவதும் வாரத்தில் ஏழு நாள்களும் நிரந்தர புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக கன்னிமாரா நூலகத்தில்  நடைபெற்ற விழாவில் அமைச்சா் க.பாண்டியராஜன் கலந்து கொண்டு புத்தக விற்பனை அரங்கத்தை திறந்து வைத்தாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மறைந்த முதல்வா் ஜெயலலிதா புத்தகங்கள் வாசிப்பதில் பெரிதும் ஈடுபாடு கொண்டவா். அந்த வகையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தில் ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. இந்த வேதா இல்லம் பொதுமக்கள் பாா்வையிடுவதற்காக அரசின் சாா்பில் திறக்கப்படவுள்ளது. எப்போது திறக்கப்படும் என்பதை முதல்வா் விரைவில் அறிவிப்பாா். அந்த இல்லத்தில் ஜெயலலிதாவைக் கவா்ந்த 15,000 நூல்கள் மக்கள் பாா்வைக்கு வைக்கப்படவுள்ளன. மேலும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளும் இடம்பெறும் என்றாா் அவா்.

Top