logo
விபத்தில் உயிரிழந்த செய்தியாளரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குக: புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம்.

விபத்தில் உயிரிழந்த செய்தியாளரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குக: புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம்.

24/Sep/2020 09:16:19

புதுக்கோட்டை: கடந்த மாதம் சாலை விபத்தில் உயிரிழந்த அறந்தாங்கி தினமணி செய்தியாளர் ஆ.கார்த்திகேயன் குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டுமென புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கத்தினர் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் தினமணி நாளிதழின் செய்தியாளராக பணியாற்றியவர் ஆ.கார்த்திகேயன். இவர், கடந்த மாதம் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு செல்லும் போது, நேரிட்ட சாலை விபத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அவரின் குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டுமென புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆட்சியர் பி. உமாமகேஸ்வரியை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். உயிரிழந்த செய்தியாளரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி உறுதியளித்துள்ளார்.


Top