logo
மக்களின் மத உணர்வுகளுக்கும், நம்பிக்கைக்கும்  தமிழக அரசு பாதுகாப்பு அளிக்கும்: சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி

மக்களின் மத உணர்வுகளுக்கும், நம்பிக்கைக்கும் தமிழக அரசு பாதுகாப்பு அளிக்கும்: சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி

19/Jun/2021 07:45:20

புதுக்கோட்டை, ஜூன் அனைத்துத்தப்பு மக்களின் மத உணர்வுகளுக்கும், நம்பிக்கைக்கும்  தமிழக அரசு பாதுகாப்பு அளிக்கும் என்றார் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி.

முதலமைச்சரின் அறிவிப்பின்படி புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவிலில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் ஒருகால பூஜை நடைபெறும் கோவில்களில் பணிபுரியும் பூசாரிகள், பட்டாச்சாரியர்கள், அர்ச்சகர்களுக்கு கோவிட் நிவாரணத் தொகை ரூ.4,000 மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வை  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்.எஸ்.ரகுபதி  (19.06.2021)  சனிக்கிழமை  தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: தமிழக அரசின் சார்பில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கோவிட் நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கோவிட் காலத்தில் வாழ்வாதாரம் இழந்துள்ள மாத ஊதியமின்றி பணிபுரியும் திருக்கோவில் பணியாளர்களுக்கு கோவிட் நிவாரணத் தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுமென  முதலமைச்சர்  அறிவித்தார்.

அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள ஒருகால பூஜை நடைபெறும் திருக்கோயில்களில் பணிபுரியும் பூசாரிகள், பட்டாச்சாரியர்கள், அர்ச்சகர்களுக்கு புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் கோவிட் நிவாரணத் தொகை ரூ.4,000 மற்றும் 10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகைப் பொருட்கள் கொண்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 331 பயனாளிகளுக்கு ரூ.13.24 லட்சம் மதிப்பீட்டில் நிவாரணத் தொகையும் மற்றும் நிவாரணப் பொருட்களும் வழங்கப்படுகிறது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு முதலமைச்சர் என்றும் துணை நிற்பார்.

இதே போன்று குடும்ப அட்டைதாரர்களும் கோவிட் நிவாரணத் தொகை இரண்டு கட்டமாக ரூ.4,000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் தொகுப்பும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆலயங்களில் பணியாற்றும் அனைவரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு என்றும் துணை நிற்கும்.

அனைத்து தரப்பு மக்களின் மத உணர்வுகள், நம்பிக்கைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசாக தமிழக அரசு திகழ்கிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு முதலமைச்சரின்  நோக்கமாகும் என்றார் அமைச்சர் ரகுபதி.

இந்நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , முன்னாள் அரசு வழக்குரைஞர் கே.கே.செல்லப்பாண்டியன்ர்கள்இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர் அபிநயா மற்றும் .நைனாமுகமது, அரு. வீரமணி, எம்.எம்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Top