30/Oct/2020 01:11:18
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மின்னணு வன்பொருள் தயாரிக்கும் தொழில் முனைவோர் தமிழக அரசின் மானியங்களை பெற்று பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு அரசு தொழில் வளா;ச்சியினை எய்திட எண்ணற்ற திட்டங்களை தீட்டியும் மானியங்கள் பல அளித்து ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு மின்னணு வன்பொருள் தயாரிப்பு கொள்கை 2020யை உருவாக்கி, இத்துறையில் அதில் ஈடுபடும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு பல மானியங்களை அளித்து தமிழக முதல்வரால் 7.9.2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
இக்கொள்கையின் அடிப்படையில் மின்னணு வன்பொருள் தொழில் உலகளாவிய அளவில் தரம் மேம்படுத்தப்படுவதோடு மிகப் பெரிய அளவில் வேலை வாய்ப்பு பெருக்கமும் ஏற்படும்.1.1.2020 அன்று முதல் மின்னணு வன்பொருள் சாதனங்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள் இக்கொள்கையின் கீழ் மானியங்களை பெற்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் ,தமிழ்நாடு மின்னணு தொழில் உற்பத்தி வளர்ச்சி 100 பில்லியன் டாலர் என்ற அளவினை 2025-ஆம் ஆண்டில் எட்டவும், மின்னணு ஏற்றுமதியில் உலகளவிய 25 சதவீதம் நமது பங்காக இருக்கவும், 2024-ஆம் வருடத்திற்குள், 1,00,000 அளவில் திறன் மற்றும் திறன் தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளை இத்தொழில் உருவாக்குவதை உன்னத நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு வன்பொருள் தயாரிப்பு கொள்கை- 2020 உருவாக்கப்பட்டுள்ளது.
ஆகவே , புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ;ந்த மின்னணு வன்பொருள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி மானியத்தோடு தொழில் துவங்கி மாவட்டத்தின் தொழில் வளா;ச்சிக்கு வித்திடுவதோடு எண்ணற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி புதுக்கோட்டை மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை தொடர்பு கொள்ளலாம்.