logo
கடந்த 17 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பெருமிதம்

கடந்த 17 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பெருமிதம்

31/Jan/2021 11:26:21

புதுக்கோட்டை, ராஜகோபாலபுரம் நகராட்சி உயர் நிலைப்பள்ளியில்  மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பங்கேற்ற அமைச்சர் சி. விஜயபாஸ்கர் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கி முகாமை தொடக்கி வைத்தார்.

பின்னர்  அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: ஜனவரி-31- இல் நாடு முழுவதும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும்  போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் கடந்த 17 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக திகழ்கிறது. தொடர்ந்து தமிழகத்தை போலியோ இல்லாத மாநிலமாக உருவாக்கும் வகையில்     5 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவம னைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் 70.26 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிட சுகாதாரத்துறையின் மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை 1,356 மையங்களில்   5 வயதிற்குட்பட்ட 1.66 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இம்முகாமினை சிறப்புற நடத்திட சுகாதாரம், மருத்துவம், வருவாய், சத்துணவு, கல்வி, ரோட்டரி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா துறைகளைச்  சேர்ந்த  5,638க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர். 

போலியோ சொட்டு மருந்து முகாம்கள் பாதுகாப்பான முறையில் நடைபெற தகுந்த கோவிட்-19 நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்றவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முகக்கவசம் அணிதல், கைகழுவுதல் போன்றவற்றை தவறாது கடைபிடிக் கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

விடுபட்ட குழந்தைகள் யாரேனும் இருப்பின் நாளையதினம் வீடு வீடாகச் சென்று மருத்துவ பணியாளர்கள் விடுபட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கு உள்ளனர். மேலும் வயல்களில் குடியிருப்போர், சாலையோர குடியிருப்புகள், செங்கல் காலவாய் குடியிருப் புகள், கல் குவாரிகள், பேருந்து  நிலையங்கள், ரயில் நிலையங்கள் சுங்கச்சாவடிகள் போன்ற பகுதிகளில் இருக்கும் குழந்தைகளுக்கு விடுபடாமல் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமின் மூலம் 5 வயதிற்குள்பட்ட ஒரு குழந்தை கூட விடுபடாமல் அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து  வழங்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்றார் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்.

இந்நிகழ்வில் துணை இயக்குநர்கள் (சுகாதாரம்) பா.கலைவாணி,  விஜயக்குமார், முன்னாள் எம்எல்ஏ- வி.ஆர்.கார்த்திக்தொண்டைமான், நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன், கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, வேளாண் விற்பனைக் குழுத்தலைவர் க. பாஸ்கர்  உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.  


Top