16/Jun/2021 07:48:19
ஈரோடு, ஜூன்: கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள்- பொதுமக்களுக்கு நிவாரணபொருட்களை கொமதேகா எம்எல்ஏ- ஈஸ்வரன் வழங்கினார்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுசெயலாளரும் , திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் ஈரோடு லக்காபுரத்தில் தூய்மை பணியாளர்கள் மற்றும்
பொதுமக்களுக்கு நிவாரண
பொருட்கள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன்: கொரோனா 3 -ஆவது
ஆலை வந்தாலும் மக்களை பாதுகாக்க அரசு
இருக்கிறது , அந்த நம்பிக்கையோடு மக்கள் இருக்கலாம் என்றார். 7 பேர் விடுதலை குறித்து கடந்த காலத்தை போலவே தற்போதும் காங்கிரஸ்
எதிர்ப்பு தெரிவிப்பதாகவும்
, தமிழக மக்களின் ஏகோபித்த கருத்து 7 பேரை
விடுதலை செய்ய வேண்டும் என்றும் அந்த
கருத்தோடு நாங்கள் ஒத்து போகிறோம் என்றார்.
நீர்நிலைகளில் சாயக்கழிவு நீர் கலப்பதற்கு அரசு தீர்வ காண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் ஈஸ்வரன் தமிழக முதல்வர் பிரதமரை சந்திக்கும் போது தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு , செங்கல்பட்டு , ஊட்டியில் தடுப்பூசி உற்பத்தி மையத்தை திறக்க அனுமதி கோருதல் , காவிரி நீர் பிரச்னை உள்ளிட்டவற்றை குறித்து பேசுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.மேலும் சசிகலா ஆடியோ விவகாரம் அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என்றும் அது குறித்து பதில் அளிக்க விரும்பவில்லை என்றார்.