logo
கடந்த சட்டப்பேரவை தேர்தலில்  பெற்ற  வாக்குகளை இருமடங்காக்க காங்கிரஸார் பாடுபட வேண்டும்: சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதரம்பரம்

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற வாக்குகளை இருமடங்காக்க காங்கிரஸார் பாடுபட வேண்டும்: சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதரம்பரம்

17/Nov/2020 05:37:00

புதுக்கோட்டை: புதுக்கோட்டை  மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று(17.11.2020)  நடைபெற்ற திருமயம், ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதிளுக்கான  வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்ட கார்த்தி சிதம்பரம் மேலும் பேசியதாவது:

கடந்த தேர்தலில் திருமயம் தொகுதியில் 17  ஆயிரம் வாக்குகளும், ஆலங்குடி தொகுதியில் 15 ஆயிரம் வாக்குகளையும் காங்கிரஸ் கட்சி பெற்றது. அதை இருமடங்காக மாற்றும் வகையில் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும்  பாடுபட வேண்டும். அப்போதுதான் திமுக நமக்கு மதிப்பளிக்கும். கேட்கும் தொகுதிகளையும் ஒதுக்க முன்வருவார்கள். மேலும், ஒவ்வொரு தொகுதிகளிலும்    காங்கிரஸ்  நிர்வாகிகள் உறுப்பினர்கள் 100 பேரைக்  கொண்ட வாட்ஸ் அப் குழு அமைக்க வேண்டும். வரும் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் வகையில் அனைவரும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றார் கார்த்தி ப. சிதம்பரம்.

இதைத்தொடர்ந்து, ஆலங்குடி தொகுதி பொருப்பாளர்களாக முன்னாள் எம்எல்ஏ- தி. புஷ்பராஜ், மகாதேவன், ஆசிரியர் தமிழ்ச்செல்வன் ஆகியோரும் திருமயம் தொகுதி  பொருப்பாளர்களாக முன்னாள் எம்எல்ஏ ராமசுப்புராம், ஏ.எல். ஜீவானந்தம், எம்.கே.முகமது இப்ராஹிம் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். 


கூட்டத்தில்,புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தலைவர் தர்ம. தங்கவேல், வடக்கு மாவட்டத்தலைவர் வி. முருகேசன்,  மாநில பொதுச்செயலர் ஏ. சந்திரசேகரன், முன்னாள் நகர்மன்றத்தலைவர் துரை.திவியநாதன், மாநிலச்செயற்குழு உறுப்பினர் ஜி.எஸ்.தனபதி, துணைத்தலைவர் ஏ.எம்.எஸ்.இப்ராஹிம்பாபு , கலைப்பிரிவு மாநிலச்செயலர் சூர்யாபழனியப்பன், மாவட்ட துணைத்தலைவர் எம்.ஏ.எம். தீன், தகவல் தொழில் நுட்பப்பிரிவு  மாவட்டத்தலைவர்  ஏ.கே. பாரூக், நகர துணைத்தலைவர் ஸ்ரீதர் , முன்னாள் நகரத்தலைவர் மேப் வீரையா,   வட்டாரத்தலைவர்கள் பழனிச்சாமி, செல்வராஜ்.

ராமையா, மாயக்கண்ணு, முருகேசன், ராமமூர்த்தி, எஸ்.எஸ்டி. பிரிவு மாநில துணைத்தலைவர் கண்ணன், வட்டார துணைத்தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் மாவட்டத்தலைவர் ஜெகந்நாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பொன்னமாரவதி நகரத்தலைவர் எஸ். பழனியப்பன், நகரப் பொருளர் ஆசிரியர் பால்ச்சாமி, மாவட்டச்செயலர்கள் சரவணபவன் மணி, ஆர். பாஸ்கர்,  வட்டார இளைஞர் காங்கிரஸ் எஸ். சுப்பையா உள்பட நூற்றும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Top