logo
கலைஞரின் 98 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை 25 -ஆவது வட்ட திமுக  சார்பில்  நலத்திட்ட உதவிகள்

கலைஞரின் 98 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை 25 -ஆவது வட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்

16/Jun/2021 12:11:24

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை நகராட்சிக்கு உள்பட்ட 25-ஆவது வட்ட திமுக சார்பில்  தமிழக முன்னாள் முதலமைச்சர்  கலைஞரின் 98 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 100 ஏழைக் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 25-ஆவது வட்ட திமுக சார்பில்  வழக்குரைஞர் ஆனந்த் ஏற்பாட்டில்  வட்ட கழக செயலாளர் செந்தில்  தலைமையில் ராஜகோபாலபுரம் பகுதியில் தமிழக முன்னாள் முதலமைச்சர்  கலைஞரின் 98 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 100 ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி மளிகைபொருட்கள்,முககவசம் உள்ளிட்ட நிவாரனப்பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிவாரணப் பொருடகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் நைனா முகமது, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் எம்.எம். பாலு, 25-ஆவது வட்ட திமுக பிரதிநிதி பெரியசாமி,பழனிவேல், நிர்வாகிகள் ராமச்சந்திரன், தினேஷ்குமார், மனோகரன்,ராமு, வாசிம் அக்ரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Top