logo
வாக்கு சேகரிக்கும் பணிகளில் தீவிர கவனம் தேவை: பெருந்துறையில் அமைச்சர் கே.சி.கருப்பணன் வலியுறுத்தல்

வாக்கு சேகரிக்கும் பணிகளில் தீவிர கவனம் தேவை: பெருந்துறையில் அமைச்சர் கே.சி.கருப்பணன் வலியுறுத்தல்

19/Mar/2021 10:35:23

ஈரோடு. மார்ச்: கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் வாக்கு சேகரிக்கும் பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றார் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பணன். 

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக- பாரதிய ஜனதா கட்சி  நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கலந்துகொண்டு அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரை அறிமுகப்படுத்தி   பேசியதாவது: 

எதிர்கட்சியினர் விடியலை நோக்கின்னு சொல்றாங்க இதுவரை இருட்டில இருந்திருக் கிறாங்க..இவங்களுக்கு என்றைக்குமே விடியாது.அதனால் தான் எப்போதுமே விடியலை நோக்கி போவதாக திமுகவினர் சொல்கின்றனர். இனி அறிமுக கூட்டங்கள் போட்டது போதும்.

அடுத்தகட்டமாக ஓட்டு சேகரிக்கும் வேலையில் தீவிரம் காட்டவேண்டும். ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் கூட்டணி கட்சிகளை சேர்த்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு ஊரிலும் உள்ள 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தபால் ஓட்டுகளில் கவனம் செலுத்த வேண்டும்.

அத்திக்கடவு- அவிநாசி திட்டம், கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட  குடிநீர் மேம்பாட்டு பணிகளை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும்.கொங்கு மண்டலத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயக்குமாரை வெற்றிபெற செய்யவேண்டும் என்றார் அமைச்சர் கே.சி. கருப்பணன்.

Top