23/Jun/2021 05:39:12
ஈரோடு, ஜூன்: ஈரோட்டில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் 250 பேருக்கு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் 11 -ஆவது நாளாக சென்னிமலை சாலையில், இரயில்வே டீசல் செட் எதிரே உள்ள விவேகானந்தர் நகரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.
இதில், மண்டல தலைவர்கள் விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக், சிறுபான்மை பிரிவு துணை தலைவர் கே.என்.பாட்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனா. இதில், மாவட்ட துணை தலைவர்கள் பாபு என்ற வெங்கடாசலம், அரவிந்தராஜ், விவசாயப் பிரிவு தலைவர் பெரியசாமி, மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்