logo
 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ்1 வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை  புதுக்கோட்டையில் தொடங்கியது

9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ்1 வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை புதுக்கோட்டையில் தொடங்கியது

14/Jun/2021 01:31:59

புதுக்கோட்டை, ஜூன்: பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு  மாணவர்களின் 9-ஆம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் விருப்பத்தின்படி, பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம் என்ற அரசின் அறிவிப்பின்படி புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் பிளஸ1 வகுப்பில் மாணவிகள் சேர்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.

 வழக்கமான வழிகாட்டு நெறிமுறைகளோடு  மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் எந்தப் பாடப்பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ அச்சூழ்நிலையில், அதற்கு விண்ணப்பித்த மாணவர் களின் 9-ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களின் விருப்பத் தின் படி, பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்.  இந்த அறிவுரைகளின்படி பிளஸ் 1 மாணவர் சேர்க்கையைஅனைத்துத் தலைமை ஆசிரியர்களும்  நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை  உத்தரவிட்டுள்ளது.

 பிளஸ் 1 மாணவர்களுக்கு ஜூன் 3-ஆவது வாரத்தில் இருந்து கொரோனா குறித்த அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் வகுப்புகளைத் தொடங்கலாம். மேலும் 2021- 2022ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்குத் தொடர்ந்து கல்வித் தொலைக்காட்சி, உயர் தொழில் நுட்ப ஆய்வகம் மற்றும் தொலைத்தொடர்பு முறைகளில் பாடங்களை கற்பிக்கத் தொடங்க லாம் என்றும்  கல்வித்துறை வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டை  புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அரசு ராணியார் மகளிர் மேனிலைப்பள்ளியில்  தலைமையாசிரியர் தமிழரசியின்  வழிகாட்டுதலில் பிளஸ்1 வகுப்புகளுக்கு மாணவிகள் சேர்க்கை திங்கள்கிழமை நடைபெற்றது.

இது குறித்து தலைமையாசிரியர் தமிழரசி கூறியதாவது: பள்ளியில் மொத்தம் 16 பாடப் பிரிவுகள் உள்ளன. அதில்,  ஆங்கில வழியில் 8 பிரிவுகளும் தமிழ் வழியில் 8 பிரிவுகளும் அடங்கும். இதில் ஆங்கில வழியில் 5 பிரிவுகளும் தமிழ் வழியில் 8 பிரிவுகள் தொழில் கல்வியில் 3 பிரிவுகள்  உள்பட மொத்தம் 16 பிரிவுகளில் மாணவிகள் விருப்பப்படி  சேர்க்கை நடைபெறுகிறது.

பெற்றோர்களுடன் மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளியில் சேர்வதற்கு வருகின்றனர்.  குறைந்த மதிப்பெண் பெற்றவர்களையும் அவர்கள் விரும்பும் பிரிவுகளில் சேர்க்கும் வகையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக்குழுவினரின் வழிகாட்டுதலின்படி சேர்க்கப்படு வார்கள் என்றார் அவர். இதோ மாவட்டம் முழுவதுமுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை தொடங்கியது.  


Top