logo
வாழ்வாதாரத்தை உயர்த்தக்கூடிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும்:  ஈரோடு மேற்கு அதிமுக, வேட்பாளர் உறுதி

வாழ்வாதாரத்தை உயர்த்தக்கூடிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும்: ஈரோடு மேற்கு அதிமுக, வேட்பாளர் உறுதி

23/Mar/2021 09:30:52

ஈரோடு, மார்ச்:  அனைத்துத்தரப்பினரின் வாழ்வாதாரத்தை உயர்த்தக்கூடிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார்  ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக, வேட்பாளர்  கே.வி. ராமலிங்கம் உறுதியளித்தார். 

ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக, வேட்பாளர் கே.வி.ராமலிங்கம், வெள்ளோடு, மேட்டுப்பாளையம், தலையக்காட்டூர், சி.எஸ்.ஐ., காலனி, கடலைகாட்டுபுதுார், லட்சுமிபுரம் காலனி, கள்ளுக்கடைமேடு, ராசாம்பாளையம் போன்ற பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்

அப்பகுதியில் வாக்கு சேகரித்து அவர் மேலும்  பேசியதாவது: இம்மாவட்டத்தில் விசைத்தறி, அதனை சார்ந்த பல்வேறு தொழில்களை நம்பி, பல ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. நுால் விலை உயர்வு, சாய, சலவை, பிளீச்சிங் மற்றும் இதர பணிகளுக்கு பல்வேறு பிரச்னைகள் நிலவுகிறது. இதற்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே முடிவு. அவ்வாறு தீர்வு காண அதிமுகவை வெற்றி பெற செய்யுங்கள்.

விசைத்தறியில் கூலி உயர்வு பிரச்னை, துணிகள் தேக்கம், வரி, கடன் பெறுதலில் உள்ள பிரச்னைகளை தீர்க்க, அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு அம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை செயல்படுத்த வாய்ப்பு தாருங்கள்.சென்னிமலை பகுதியில் உள்ள விசைத்தறி உள்ளிட்ட பல்வேறு சொசைட்டிகள் லாபகரமாக இயங்கவும், சொசைட்டி மூலம் வேலைவாய்ப்பு பெறவும், தொழில் வாய்ப்பையும், இங்கு உற்பத்தியாகும் துணிகள், பெட்ஷீட் போன்றவைகளின் விற்பனையை உயர்த்த, அரசு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இப்பகுதியில் சாலை மேம்பாடு, போதிய அளவு குடிநீர் கிடைக்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்வோம். இவற்றை நிறைவேற்ற என்னை வெற்றி பெறச்செய்யுங்கள் என்றார். தொடர்ந்து , சிறுவன்காட்டுவலசு, தொட்டிபாளையம், ஏ.டி.காலனி, காரைவாய்க்கால், தேவனம்பாளையம் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். பல்வேறு கட்சியில் இருந்து அதிமுக வில் இணைந்தவர்களுக்கு  அடையாள அட்டையை வழங்கினார்.

Top