logo
வள்ளலார் இல்லத்தில் ஜவஹர்லால் நேருவின் 131-ஆவது பிறந்த தின கொண்டாட்டம்

வள்ளலார் இல்லத்தில் ஜவஹர்லால் நேருவின் 131-ஆவது பிறந்த தின கொண்டாட்டம்

13/Nov/2020 09:16:11

புதுக்கோட்டை  வாசகர் பேரவை  சார்பில்,  ஏ .மாத்தூரில் உள்ள வள்ளலார் இல்லத்தில் முதல் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 131-ஆவது பிறந்த தினம் மற்றும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, வள்ளலார் இல்ல நிர்வாகி காத்தமுத்து சுவாமிகள் தலைமை வகித்தார்.வள்ளலார் இல்லத்தை  சேர்ந்த வெற்றிவேல் வரவேற்றார்.

சிறப்பு  விருந்தினராக கலந்து கொண்ட  வாசகர் பேரவை செயலரும் மன்னர் கல்லூரி முன்னாள் பேராசிரியர் சா.விஸ்வநாதன் பங்கேற்று,  மகாத்மா காந்தியின் சத்தியசோதனை புத்தகங்கள் வழங்கிப்  பேசியபோது:

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் சுதந்திரபோராட்ட வீரர் மட்டுமல்ல மிகச்சிறந்த எழுத்தாளருமாவார். அவர் சிறையில் இருந்த காலத்தில் தனது மகள் இந்திராவிற்கு எழுதிய கடிதங்கள் தான், உலக வரலாறு, இந்தியாவைப் பற்றிய கண்டுபிடிப்புகள் போன்ற நூல்கள். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி அறிய அவருடைய சுயசரிதையை வாசிக்க வேண்டும்.மேற்கண்ட மூன்று நூல்களையும் ஒவ்வொரு மாணவரும் அவசியம் வாசிக்க வேண்டும்.

மகாத்மா காந்தி, நேருவின் அரசியல் குருவாவார். மகாத்மா காந்தியை வள்ளலாரின் மறு அவதாரம் என்றும் கூறுவர்.மகாத்மா காந்தியின் சுயசரிதமான சத்தியசோதனையைஒவ்வொரு மாணவரும் அவசியம் வாசிக்க வேண்டும். குறைந்தபட்சம் தினந்தோறும் ஒரு அத்தியாயத்தையாவது வாசிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் வள்ளலார் இல்ல நிர்வாகிகள் மாவட்ட துணை தலைவர் மாணிக்கம், பழனிவேல்,மரம் நண்பர்கள், ஆலோசகர்  பொறியாளர் ரியாஸ்கான் ஆகியோர் பங்கேற்றனர். வள்ளலார் இல்ல கண்காணிப்பாளர்  ரகுபதி நன்றி கூறினார் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Top