logo
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஈரோடு ஆட்சியரிடம் மனு அளிக்க திறண்டு வந்த பெண்கள்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஈரோடு ஆட்சியரிடம் மனு அளிக்க திறண்டு வந்த பெண்கள்

30/Nov/2020 11:14:09

ஈரோடு: இது குறித்து ஈரோடு  மாவட்ட  ஆட்சியர்  அலுவலகத்திற்கு  மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த  நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து அங்குள்ள புகார் பெட்டியில் மனு போட்டனர்.அந்த மனு விவரம்:

மொடக்குறிச்சி பகுதிக்குட்பட்ட திருமங்கலம் சின்ன குளம் வெள்ளியம்பாளையம் பள்ளியூத்து,ராசாம்பாளையம், ராட்டை சுற்றி பாளையம் உட்பட பல்வேறு கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு பூர்வீகத் தொழில் விவசாயம்தான். விவசாயம் நிலம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை ஈரோடு -பழனி முக்கிய சாலை அருகே உள்ளது. 

இந்த டாஸ்மாக் கடையில் மது அருந்தப் வருபவர்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதுவரை அந்த இடத்தில் ஒன்பதுக்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. சமீபத்தில் ராட்டை சுற்றி பாளையம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்ற வாலிபர் மது அருந்தி வாகனம் ஓட்டி வந்த நபரால் விபத்து ஏற்பட்டு இறந்துவிட்டார். மேலும் இந்த டாஸ்மாக் கடை செல்லும் பாதைக்காக குரங்கின் ஓடையை தடுத்து அரசு அனுமதி இன்றி அரசு விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக பாதை அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் அந்த டாஸ்மாக் கடை வளாகத்தில் ஒரு கிணறு உள்ளது இதில் இதுவரை நான்கு பேர் தவறி விழுந்து உள்ளனர். இது குறித்து மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து அந்தக் கட்டிடத்தின் உரிமையாளரிடம் கூறியும் நடவடிக்கை இல்லை. மாறாக அவர் எங்களுக்கு மிரட்டல் விடுத்து வருகிறார்.  மேலும் இந்த டாஸ்மாக் கடையை தாண்டி தான் பைரவர் ஆலயம் உள்ளது. 

இந்தக் கோவில் வளாகத்தில் சில நேரங்களில் குடிமகன்கள் படுத்து தூங்குவது பாட்டில்களை வீசி எறிந்து செல்வது போன்று உள்ளனர். மேலும் இந்த கோயில் அருகே ஹெல்த்கேர் சிகிச்சை மையம் உள்ளது. குடிமகன் உங்களால் இங்கு வரும் நோயாளிகளுக்கும் நிறைய தொந்தரவு ஏற்பட்டு வருகிறது.எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Top