logo
அரசு காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை அளிப்பதற்கு தனியார் மருத்துவமனைகளில் 10 சதவீத படுக்கைகள் ஒதுக்கீடு:  கரூர் எம்பி செ. ஜோதிமணி  முதல்வருக்கு நன்றி

அரசு காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை அளிப்பதற்கு தனியார் மருத்துவமனைகளில் 10 சதவீத படுக்கைகள் ஒதுக்கீடு: கரூர் எம்பி செ. ஜோதிமணி முதல்வருக்கு நன்றி

14/Jun/2021 10:50:46

கரூர், ஜூன்: அரசு காப்பீட்டு சிகிச்சை அளிப்பதற்கு தனியார் மருத்துவமனைகளில் 10 சதவீத படுக்கைகள் ஒதுக்கீடு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு  கரூர் மக்களவை உறுப்பினர்  செ. ஜோதிமணி   நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்   டுவிட்டரில்  வெளியிட்ட பதிவில். தனியார் மருத்துவமனைகள் அரசு காப்பீட்டை ஏற்க மறுப்பது தொடர்பாக   தமிழக முதல்வர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன். நடவடிக்கை எடுக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் 10% படுக்கைகள் அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்து கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு உதவிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மன்மார்ந்த நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.

 

இப்பிரச்னை குறித்து  தமிழக முதல்வர் மு..ஸ்டாலினுக்கு 8.6.2021 -இல் ஜோதிமணி எம்பி எழுதிய கடித விவரம்மக்களை வாட்டிவதைக்கும் கொரொனா நோய் தொற்று பரவை நடுக்க தமிழ்நாடு அரசு எடுத்துவரும் விரிவான நடவடிக்கைகள் மிகுந்த நம்பிக்கையை அளிக்கின்றன. இக்காலகட்டத்தில், தனியார் மருத்துவமனைகள் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் மூலம் சிகிச்சை அளிக்க மறுப்பது குறித்து தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

கொரொனா சிகிச்சை மட்டுமல்லாது, இதய அறுவை சிகிச்சை, மூளை அறுவை சிகிச்சைஉள்ளிட்ட உயிர் காக்கும் பல்வேறு சிகிச்சைகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் செல்லாது என்று தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து தெரிவித்து வருவதாக தினமும் பல்வேறு மக்களிடமிருந்து புகார் வருகின்றன. இந்த இக்கட்டான காலத்தில், ஏற்கனவே ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தனியார் மருத்துவமனைகள் இரக்கமற்ற கொள்ளையில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது.

எனவே, தமிழ்நாடு அரசு, உடனடியாக தலையிட்டு, இத்திட்டத்தின் வழிகாட்டுநெறிமுறைகளையும் அரசாணைகளையும் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் மீண்டும் அனுப்பி அவற்றை சரியாக பின்பற்றுவதை உறுதி செய்யவேண்டும். மேலும் வட்ட அளவில், குழு அமைத்து இத்திட்டம் சரியாக நடைமுறைபடுத்துவதையும் கண்காணிக்க வேண்டும் என்று அக்கடிதத்தில்  அவர் குறிப்பிட்டிருந்தார்..

இதையடுத்து, மருத்துவமனைகளில் 10% படுக்கைகள் அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்வர் மு..ஸ்டாலின்   உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு கரூர் எம்பி ஜோதிமணி நன்றி தெரிவித்துள்ளார்.

Top