logo
புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிட்டியூனியன் வங்கி மூலம் 20 ஆக்சிஜன் செறிவூட்டி கருவி அளிப்பு

புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிட்டியூனியன் வங்கி மூலம் 20 ஆக்சிஜன் செறிவூட்டி கருவி அளிப்பு

23/May/2021 11:20:59


புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு  சிட்டி யூனியன் வங்கியின் மூலம் 20 ஆக்ஸிஜன் செறிவூட்டும்  கருவிகள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு  தமிழக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதியின் கோரிக்கையினை ஏற்று   சிட்டி யூனியன் வங்கி சார்பில்  20 ஆக்ஸிஜன் செறிவூட்டும்  கருவிகள் வழங்கப் பட்டது. 

இது குறித்து அமைச்சர் எஸ். ரகுபதி கூறியதாவது:கோவிட் நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் பல்வேறு துறைகளும் ஒருங்கிணைந்து கோவிட் தடுப்பு பணிகள் ஈடுபட்டு வருகிறது.

அரசின் தீவிர நடவடிக்கையின் காரணமாக கொரோனா பரவல்  கட்டுப்படுத்தப்பட்டு வரு கிறது. அரசுடன் இணைந்து பொதுமக்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நோய்த்தடுப்பு பணியில் தங்களது பங்களிப்பை அளித்து வருகின் றனர்.

அந்த வகையில் நமது கோரிக்கையினை ஏற்று கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 20 ஆக்சிஜன் செறிவூட்டும்  கருவிகள் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தற்போது  வழங்கப்படுகிறது. இதற்காக சிட்டி யூனியன்  வங்கிக்கு எனது நன்றிகள்.

தற்போதைய சூழ்நிலையில் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்ஸிஜன் இன்றியமையாத தேவையாக  அமைந்துள்ளது. மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, பொன்னமராவதி, இலுப்பூர், கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும்

இது போன்ற ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையில் மேலும் 20 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்க வேண்டும் என சிட்டி யூனியன் வங்கி  நிர்வாகத்திடம் தற்பொழுது கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படை யில் மேலும் 20 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள் உடனடியாக வழங்குவதாக உறுதியளித்து ள்ளனர். இதற்கும் எனது நன்றிகள்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கோவிட் இல்லாத நிலையை உருவாக்க முடியும் என்பதை நினைவில் கொண்டு ஒவ்வொரு வரும் அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றி தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்  என்றார் அமைச்சர் எஸ். ரகுபதி.

இந்நிகழ்வில்,மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி சிட்டி யூனியன் வங்கி உதவி பொது மேலாளர் வெங்கடேஷ்வரன்,

சிட்டி யூனியன் வங்கி மண்டல வளர்ச்சி அலுவலர் மோகனசுந்தரம், புதுக்கோட்டை கிளை மேலாளர் சுரேஷ்பாபு, சிட்டி யூனியன் வங்கி கும்பகோணம் லெட்சுமணன், செந்தூரன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராம.வயிரவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Top