logo
14-ஆவது ஊதிய பேச்சுவார்த்தையை தொடங்கக் கோரி ஈரோட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

14-ஆவது ஊதிய பேச்சுவார்த்தையை தொடங்கக் கோரி ஈரோட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

30/Jan/2021 07:12:27

ஈரோடு, ஜன:  14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி ஈரோட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு சென்னிமலை சாலையில்  உள்ள அரசு போக்குவரத்து கழக அலுவலக முன் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தொ.மு.ச. கிளை செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார்.

 தொ.மு.ச. மாவட்ட பொதுசெயலாளர் குழந்தைசாமி முன்னிலை வகித்தார். இதில், பொங்கல் பண்டிகைக்கு பிறகு 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்குவதாக அரசும், நிர்வாகமும் அறிவித்த வாக்குறுதி நாடகமா, காலதாமதமின்றி பேச்சுவார்த்தையை உடனே தொடங்கி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், சி.ஐ.டி.யு. கிளை செயலாளர் சரவணன் மற்றும் ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி, எச்.எம்.எஸ், டி.டி.எஸ்.எப், போன்ற தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 


Top