12/Jun/2021 10:17:45
புதுக்கோட்டை
மாவட்டம், ஆலங்குடி அருகே நலிவடைந்த கிராமப்புற நாடகக்கலைஞர்களுக்கு சமூக ஆர்வலர்கள்
சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் 4 சாலையில் நடைபெற்ற
நிகழ்வில், 20-க்கும் மேற்பட்ட நாடகக் கலைஞர்களுக்கு அரிசி, சர்க்கரை, முகக்கவசங்கள்,
ஊட்டச்சத்து மாத்திரைகள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன. நலத்திட்ட உதவிகளை மன்னர்
கல்லூரி பேராசிரியர்கள் ஜெயசுதா, சேதுராமன், வம்பன் சிவக்குமார் ஆகியோர் பங்களிப்பில்
உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில்,மரம்
நண்பர்கள் பாரதவிலாஸ் கிருஷ்ணமூர்த்தி, பழனியப்பா கண்ணன், பொறியாளர் ரியாஷ்கான்,வி.இறையன்பு,
மரம் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் சா.விஸ்வநாதன், மருத்துவர் ஜி.எட்வின்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.