logo
கொத்தமங்கலத்தில் கால்நடைகளுக்கு இலவச மருத்துவ முகாம்.

கொத்தமங்கலத்தில் கால்நடைகளுக்கு இலவச மருத்துவ முகாம்.

14/Aug/2020 09:35:53

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் கால்நடைகளுக்கு இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

   ஆலங்குடி பகுதியில் சில மாதங்களாக ஒருவகை அம்மை நோயில் ஏராளமான கால்நடைகள் பாதிக்கப்பட்டன. இதனால், கால்நடை வளர்ப்போர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிவந்தனர். இந்நிலையில், இந்நோயின் தாக்கத்தை கண்டறிந்து கால்நடைகளைக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், கொத்தமங்கலத்தில் கால்நடைகளுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

  கொத்தமங்கலம் ஊராட்சி சிதம்பரவிடுதியில் நடைபெற்ற முகாமை ஊராட்சித் தலைவர் சாந்திவளர்மதி தொடங்கி வைத்தார். இதில்,  மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் சாகுல்ஹமீது தலைமையில், செல்வநாயகி, முத்தழகு உள்ளிட்ட கால்நடை மருத்துவர்கள். கொத்தமங்கலம் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பரிசோதனை, சிகிச்சை அளித்தனர்.


Top