logo
கொரோனா சிகிச்சை மையம் அமைந்துள்ள புதுக்கோட்டை அரசு  பிற்படுத்தப்பட்டோர் மாணவிகள் விடுதியில் ஆட்சியர் ஆய்வு

கொரோனா சிகிச்சை மையம் அமைந்துள்ள புதுக்கோட்டை அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவிகள் விடுதியில் ஆட்சியர் ஆய்வு

22/Apr/2021 09:39:38

புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டை அரசு  பிற்படுத்தப்பட்டோர் மாணவிகள் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில்  புதிதாக உருவாகக்பப்டடுள்ள  படுக்கை வசதிகளை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர்  கூறியதாவது: புதுக்கோட்டை மாவடட் த்தில் கொரோனா நோய் தொற்றைத் தடுக்கும்  வகையில் தொடர்ந்து பல்வேறு  முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவடட்த்தில் கொரோனா நோய் தொற்று விகிதம் 3.7 சதவீதமாக  ;உளள்து.  மாவட்டத்தில்  கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை   500 ஐ நெருங்கியுள்ளது.கொரோனா நோயாளிகளுக்கு; சிகிச்சை அளிக்கும் வகையில் மாவட்டத் தின் தற்பொழுது 1,529 படுக்கைகள்   தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

 எனினும் கொரோனா நோயாளிகளுககு சிகிச்சை அளிக்கும்  வகையில்  சுகாதாரத் துறையின் சார்பில் புதுக்கோட்டை அரசு  பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை  மையமாக மாற்றப்பட்டு வருகிறது. இதில் 4 தளஙக்ள்  நோயாளிகளுக்கு  சிகிச்சை அளிக்கவும்  ஒரு தளம் மருத்துவர்கள் உள்பட சிகிச்சை அளிக்கும் குழுவினர் தங்கும் வகையிலும்  அமைக்கப்பட்டு வருகிறது. 

 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை  தேவைப்படும்  பொழுது  இந்த மையம் உடனடியாக பயன்பாட்டிற்கு கொணடு வரப்படும். இதேபோன்று அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு  வந்த கொரோனா  சித்த மருத்துவ சிகிச்சை  மையமும் வாக்கு  எண்ணிக்கை முடிவுற்றவுடன் மீண்டும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை  அளிக்கும்  வகையில் பயன்பாட்டுக்கு  கொணடு வரப்படும் என்றார் ஆட்சியர்.

 ஆய்வின்போது  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்  நல அலுவலர் முத்தமிழ்செல்வன்,  வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், பொது சுகாதார துணை இயக்குநர் பா. கலைவாணி, நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 


Top