logo
10 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து இறுதி முடிவை முதல்வர் அறிவிப்பார்:அமைச்சர் செங்கோட்டையன்

10 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து இறுதி முடிவை முதல்வர் அறிவிப்பார்:அமைச்சர் செங்கோட்டையன்

19/Feb/2021 06:04:27

ஈரோடு பிப்: தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி  பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பான இறுதி முடிவை தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என்றார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.. செங்கோட்டையன்.

 ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற  ரூ.2.80 கோடி மதிப்பிலான வட்டார போக்குவரத்து அலுவலகம் திறப்பு விழா, ரூ.6 லட்சம் மதிப்பிலான ..சி பூங்கா புதுப்பித்தல் பணிகள், சக்தி மசாலா அறக்கட்டளையின் சார்பில் கொங்காலம்மன் கோவிலில் கட்டப்பட்டுள்ள அன்னதான கூடம் திறப்பு விழா மற்றும் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார்  ரூ. 4.50  கோடி செலவில் பசுமைக் கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று  பணிகளை தொடங்கி வைத்தார்  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

இதையடுத்து, செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:10 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருவதாகவும்இறுதி முடிவு  தமிழக முதல்வர் தான் அறிவிப்பார். திமுக ஆட்சியில் ஊராட்சி மன்றங்களில் நூலகங்கள் திறக்கப்பட்டன. தற்போது 8 ஆயிரம் நூலங்கள் செயல்படுகின்றன. அதிமுக அரசு பதவியேற்றவுடன் அதிக நூலகங்கள் திறக்கப்பட்டு, போட்டித் தேர்வுகளுக்கு தேவையான 8,000 புத்தகங்கள் அடங்கிய நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன..

 

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்பட வில்லைஇது குறித்து  வல்லுநர்களுடன் கல்வித்துறை ஆலோசித்து முதல்வர் இறுதி முடிவு எடுப்பார்தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த நிலை தொடரும் என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

இந்நிகழ்ச்சியில் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராமலிங்கம், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Top