09/Jun/2021 10:16:08
புதுக்கோட்டை
மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் புதன்கிழமை மருத்துவ முகாம் நடைபெற்றது.
கொத்தமங்கலம்
ஊராட்சி சிதம்பரவிடுதி அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முகாமை ஊராட்சித் தலைவர் சாந்தி
வளர்மதி தொடங்கி வைத்தார். முகாமில், மருத்துவர் எஸ்.அருள் தலைமையிலான மருத்துவக்குழுவினர்
அப்பகுதி மக்களுக்கு சளி, காய்ச்சல் குறித்தும், அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனையும்
மேற்கொண்டனர்.முகாமில், கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்று
உடல்பரிசோதனை செய்துகொண்டனர்.