16/Dec/2020 09:14:00
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நின்று தீவனங்கள் உட்கொள்வது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் இன்று காலை சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை சாலையை வழிமறித்து நின்று தீவனங்கள் உட்கொண்டு இருந்தது அப்போது மைசூரிலிருந்து ஆசனூர் வழியாக சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்த காரை திடீரென துரத்தியது சுதாரித்து கொண்ட வாகன ஓட்டுநர் காரை பின்னோக்கி செலுத்தி உயிர் தப்பினார். பின்னர் அந்த காட்டு யானை சாலையின் நடுவே சிறிது நேரம் நின்று விட்டு வனப்பகுதிக்குள் சென்றது. கடந்த சில நாட்களாகவே காட்டு யானைகள் ஆசனூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் சாலையோரம் நின்று தீவனங்கள் உட்கொண்டு வருவதாகவும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை கவனத்துடன் இருக்குமாறும் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.