09/Jun/2021 09:29:01
சென்னை, ஜூன்: தமிழகத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் ஜூன் 14 முதல் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு: நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது என தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது. உயர்கல்வி பயிலுவதற்கான சான்றிதழ்கள் வழங்குவது சார்ந்த பணிகள்.
மாணவர்கள் சேர்க்கை தொடங்க வேண்டியுள்ளதாலும் மற்றும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்கள் வழங்க வேண்டி உள்ளதாலும், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்வது சார்ந்தும் மற்றும் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி கற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிட செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ளப்பட வேண்டும்.
எனவே, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தொடக்கப்பள்ளி முதல்மேல்நிலைப்பள்ளி
வரை) பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும்
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) பின்பற்றி வரும் 14.6.2021 முதல் பணிக்கு வருகை தர வேண்டுமென இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
இதனை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் உறுதிசெய்திட கேட்டுக்
கொள்ளப்படுகிறது.