logo
ஆலங்குடி தொகுதியில் புதிய நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைத்து , மருத்துவமனைக்கு உபகரணங்களை அமைச்சர் மெய்யநாதன்  வழங்கல்

ஆலங்குடி தொகுதியில் புதிய நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைத்து , மருத்துவமனைக்கு உபகரணங்களை அமைச்சர் மெய்யநாதன் வழங்கல்

08/Jun/2021 10:40:30

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை அருகே ஆலங்குடி தொகுதியில் புதிய நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைத்து , மருத்துவமனைக்கு உபகரணங்களை அமைச்சர் மெய்யநாதன்  வழங்கினார்.

 

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் கோவிட் கவனிப்பு மையத்திற்கு ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவியினை வழங்கி, நேரடி அரசு நெல் கொள்முதல்  நிலையங்களை ஆலங்குடி பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல்  நிலையங்களை  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன்  (8.6.2021) செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:தமிழகத்தில் கோவிட் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள்போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில்  சட்டத்துறை அமைச்சருடன்  இணைந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தொற்று இல்லாத நிலையினை உருவாக்கிடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில்  தற்போது ஆலங்குடி அரசு மருத்துவமனையில் முன்களப் பணியாளர்களுக்கு மருத்துவ முகாமினை துவக்கி வைத்து கோவிட் நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று இம்மருத்துவமனையில் புற காவல் நிலையம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

கோவிட் தடுப்பு பணிகளில் முன்னின்று அர்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் நலனில் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. இவர்களுக்கு தேவையான கோவிட் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பபடுவதை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்;டுள்ளது.

 

அந்த வகையில் இன்றைய தினம் ஆலங்குடி பேரூராட்சியில் பணிபுரியும் 70 தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மறமடக்கி அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் செயல்பட்டு வரும் கோவிட் கவனிப்பு மையத்திற்கு தன்னார்வலர் சார்பில் வழங்கப்பட்ட ஆக்ஸிஜன் செறியூட்டும் கருவியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வடகாடு மற்றும் நெடுவாசல் கிழக்கு ஆகிய பகுதிகளில் விவசாயிகளின் கோரிக்கை யினை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதனால் இப்பகுதி விவசாயிகள் இடைதரகர்கள் இன்றி நேரடியாக தாங்கள் விளைவித்த நெல்லை உரிய விலைக்கு விற்று பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்  அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

முன்னதாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவிட் சிகிச்சைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். மேலும் அறந்தாங்கி வட்டம், சிலட்டூர் மற்றும் சுப்பிரமணியபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆக்ஸிஜன் செறியூட்டும் கருவிகளை வழங்கி முன்களப் பணியாளர்களுக்கு கோவிட் நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

இதில், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோக, மாவட்ட கல்வி அலுவலர் திராவிட செல்வம், பொது சுகாதார துணை இயக்குநர் விஜயக்குமார், ஒன்றியக்குழு தலைவர்.வள்ளியம்மை தங்கமணி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் மோகன், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

Top