logo
எய்டு இந்தியா இலவச ஆம்புலன்ஸ் சேவை: எம்எல்ஏ சின்னத்துரை தொடக்கி வைப்பு

எய்டு இந்தியா இலவச ஆம்புலன்ஸ் சேவை: எம்எல்ஏ சின்னத்துரை தொடக்கி வைப்பு

07/Jun/2021 10:03:44

புதுக்கோட்டை, ஜூன்:  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அருகே அரசமலையில்  எய்டு  இந்தியாதொண்டு நிறுவனம் சார்பில் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச ஆம்புலன்ஸ் சேவையை கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்.சின்னத்துரை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இதில் எம்எல்ஏ-சின்னத்துரை பேசியதாவது: பொன்னமராவதி ஒன்றியம் அரசமலை ஊராட்சி மற்றும் அதனைத் சுற்றியுள்ள கிராம மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லவும், பொதுமக்களை தடுப்பு ஊசி முகாம்களுக்கு அழைத்துச் செல்லவும் எய்டு இந்தியா தொண்டு நிறுவனம் மூலம் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

எய்டு இந்திய நிறுவனம் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடந்து செய்து வருகிறது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலில் பதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளது.

மேலும், காஜா புயல் மற்றும் கொரோன நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைக் கண்டறிந்து அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்துவரும் எய்டு இந்தியா நிறுவனத்தின் சேவை தொடர வேண்டும் என்றார்.


இதையடுத்து, வாழைக்குறிச்சி மற்றும் அரசமலை ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் மாஸ்க், சானிடைசர் மற்றும் சோப்புகளும் எய்டு இந்திய நிறுவனம் சார்பில் வழங்கிஎம்எல்ஏமரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு  விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன்கிராம நிர்வாக அலுவலர் பாண்டியன்ஊராட்சி மன்ற தலைவர்கள் அப்துல்சலாத், மதியரசன், ஒன்றிய கவுன்சிலர் முருகேசன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.பக்குருதீன், ஊராட்சி மன்றத் துணை தலைவர் முத்துக்கருப்பன், ஊர் தலைவர் சுப்பையா மற்றும் தாமோதரன் ராமகிருஷ்ணன், சுப்பிரமணியன்பிச்சை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Top