logo
அமைச்சர் செங்கோட்டையன் விழாவில்  கோரிக்கை மனு அளிக்க ஊர்ப்புற நூலகர்கள்  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் திரண்டதால்  பரபரப்பு

அமைச்சர் செங்கோட்டையன் விழாவில் கோரிக்கை மனு அளிக்க ஊர்ப்புற நூலகர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் திரண்டதால் பரபரப்பு

21/Feb/2021 07:48:45

ஈரோடு பிப்: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்ற  நிகழ்ச்சி நடந்த திருமணமண்டபத்தில் தமிழ்நாடு பொது நூலகத்துறை ஒருங்கிணைந்த ஊர்ப்புற நூலகர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை செங்கோட்டையனிடம்  தமிழ்நாடு பொது நூலகத்துறை ஒருங்கிணைந்த ஊர்ப்புற நூலகர்கள் மனு அளித்தனர். அந்த  மனு விவரம்: 

 12-ஆம் வகுப்பு கல்வித்தகுதியில் சிஎல்ஐஎஸ் வேலைவாய்ப்புஅலுவலகத்தின் மூலம் தேர்வுபெற்றவர்கள் 1514 பேர்கள் ஊர்ப்புற நூலகர்களாக பணியாற்றிவருகின்றனர். இவர்கள் பணிக்கு சேர்ந்த போது ரூ.4,500 மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டு வந்தநிலையில் 13 ஆண்டுகளில் தற்போது ரூ.10 ஆயிரம் ஊதியம் பெற்று வருகின்றனர்.

இவர்களுக்கு 2016-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 -விதியின் கீழ் ஏழாவது காலமுறை ஊதியம் அறிவிக்கப்படும் எனதெரிவித்திருந்தார்.   மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கையை முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்வதா கஉறுதியளித்தார். இதனால் அமைச்சர் பங்கேற்ற சிறிதுநேரம் பரபரப்புஏற்பட்டது.

Top