logo
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜூன்26-இல் கரூர் மாவட்ட அனைத்து தொழிற் சங்க  கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜூன்26-இல் கரூர் மாவட்ட அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

24/Jun/2021 10:24:08

news by  chockalingam/ கரூர், ஜூன்: தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக  வரும் சனிக்கிழமை (ஜூன்26)  கரூர் மாவட்ட அனைத்து தொழிற் சங்க  கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானித்துள்ளனர்.
டெல்லி மாநகர எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜூன் 26 -ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களிலும் கேந்திரமான தொழில் நகரங்களிலும் அனைத்து தொழிற் சங்கங்களின் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ற மாநில அனைத்து தொ ழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது தொடர்பாக கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் கூட்டம்  ஸும் காணொலி வாயிலாக  ஆலோச னைக்கூட்டம்  தொமுச  மாவட்ட செயலாளர் அண்ணவேலு தலைமையில் நடைபெற்றது .

நான்கு  தொழிலாளர் சட்ட தொகுப்புகள் மூன்று  வேளாண் சட்டங்களை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்துவது. விவசாய விலைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை ஒன்றிய அரசு சட்டபூர்வமாக ஆக்கவேண்டும்.

குறிப்பிட்ட கால வரையறைக்குள் இந்தியா முழுமையும் அனைவருக்கும் கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் .அனைத்து குடும்பங்களுக்கும் கொரோனா  நிவாரணநிதி மாதம் ரூபாய் 7500-ம்  மாதம் 10 கிலோ உணவு தானியங்களும்  ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.

26.6.2021 அன்று கரூர் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் சங்ககள் நடத்தும் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிப்பது  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், சிஐடியு மாவட்ட செயலாளர் முருகேசன்,ஜீவானந்தம், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ஜி.பி.வடிவேல், எச்எம்எஸ் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ், எம்.எல்.எப் குணாளன், யு டியுசி மோகன்,  ஏஐசிசிடியு மா.பால்ராஜ், எல்.எல் எப் சுடர்வளவன்,  அமைப்புசாரா தொழிற்சங்க தலைவரும்,விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பளர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Top