logo
ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி கொரானா மருத்துவமனைக்கு தனியார் நிறுவனம் ரூ.1 கோடி நிதி அளிப்பு

ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி கொரானா மருத்துவமனைக்கு தனியார் நிறுவனம் ரூ.1 கோடி நிதி அளிப்பு

01/Jun/2021 01:17:37

ஈரோடு மே: பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் கொரானா நோயாளிகளுக்கான மருத்துவமனை கட்டும் பணிக்கு, ஆதித்யா மசாலா நிறுவனம்  1 கோடி ரூபாய் வழங்கியது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த கொரானா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு சாதாரண மற்றும் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகள் கிடைக்காமல், நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.

இதனால், 1,000 படுக்கைகளுக்கு மேற்பட்ட எண்ணிக்கை நோயாளிகள் தங்கும் வகையில் மூன்று, நான்கு கட்டடமாக அரசு மற்றும் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் உதவியுடன் கட்டடங்கள் கட்டப்படுகிறது.

இம்மருத்துவமனைக்கு கட்டிடம் கட்டுவதற்காக, ஆதித்யா மசாலா நிறுவனம் சார்பில், நானி அக்ரோ புட்ஸ் தலைவர் ஹரி போடர்,  1 கோடி ரூபாய் நிதியை, வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் வழங்கினர்.

 இதில், ஈரோடு பெரியார் நகர் பகுதி தி.மு.க. செயலாளர் அக்னி சந்துரு, லோட்டஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Top