logo
நிகழாண்டில் உழைக்கும் மகளிர் 2,334  பேருக்கு அம்மா இருசக்கர வாகனம்: தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

நிகழாண்டில் உழைக்கும் மகளிர் 2,334 பேருக்கு அம்மா இருசக்கர வாகனம்: தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

31/Jan/2021 12:31:15

புதுக்கோட்டை, ஜன: புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டில்  2,334 உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படவுள்ளதால் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

 இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: 2020-21 -ஆம் ஆண்டிற்கு அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத் தில் ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வாழும் மகளிர் பணியிடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு எளிதில் செல்ல இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்க உள்ளாட்சி அமைப்பு வாரியாக கடந்த 23.11.2020 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு 2,334 உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

ஆகவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பணிபுரியும் அல்லது சுயதொழில் செய்யும் மகளிர் சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை  சமர்ப்பித்து இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

Top